சீனாவின் பெயரைச் சொல்வதற்கு மத்திய அரசு பயப்படுவது ஏன்? காங்கிரஸார் கேள்வி

Photo of author

By Parthipan K

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் 74-வது சுதந்திர தின நாளில் கொடியேற்றி வைத்த பிறகு தனது உரையை நிகழ்த்தினார்.
அதில் அவரது பேச்சு பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “‘மத்திய அரசின் ஆட்சியில் உள்ளவர்கள், அத்துமீறி நுழையும் சீனாவின் பெயரைச் சொல்வதற்கு என்ன பயம்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டைப் பாதுகாக்கவும், சீனாவின் அத்துமீறலை எதிர்த்து சீனாவை பின்னுக்குத் தள்ளவும் இந்த சுதந்திர தினத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது அரசு? இன்று இந்தியர்கள் அனைவரும் அரசிடம் கேள்வி கேட்க வேண்டும்.

ஒரு காங்கிரஸ் தொண்டரும், ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவின் ராணுவத்தின் மீது பெருமை கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.