இவ்வளவு வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? நடிகையின் பகீர் பதில்!!
தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகை தான் சதா. இவரின் முதல் திரைப்படத்திலேயே இவர் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அதன் பிறகு, எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல்வேறு படங்களிலும் நடித்து வந்தார். இதனையடுத்து சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
பிறகு சில ஆண்டுகள் கழித்து நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு-வுடன் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த எலி திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இவர் இடையில் 2018 ஆம் ஆண்டு தயாரிப்பாளராக மாறி டார்ச் லைட் என்ற திரைப்படத்தை இயக்கியும் அதில் நடித்தும் வந்தார். இந்த திரைப்படமும் இவருக்கு சொல்லும்படியான புகழை தேடி தரவில்லை.
அந்த வகையில், தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு 39 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணத்தை கூறி உள்ளார்.
அதில், நாம் அனைவரும் திருமணம் செய்து கொள்வதால் தனது சுதந்திரத்தை இழக்கிறோம். மேலும், திருமண பந்தத்தில் புரிதல் என்பது மிகவும் அவசியம். அது ஏற்படலாம் இல்லை ஏற்படாமலும் போகலாம்.
திருமணம் செய்து கொண்டால் என்னுடைய ஆசையை தொடர முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், பல்வேறு திருமண பந்தங்கள் தோல்வியில் தான் முடிகிறது.
எனவே, எனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று நடிகை சதா அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி உளார். இவரின் இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.