வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!

0
416

வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!

 

வீட்டின் பிரதான வாசலில் எப்பொழுதும் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் வீட்டை கட்டும்போது தலைவாசல் வைத்ததும் சிறப்பு பூஜை செய்து பின்னர் மற்ற வீட்டு வேலைகளை துவங்குகின்றனர்.இத்தகைய தலைவாசலில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்து கொண்டிருக்கும். இதன் சக்தியை அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வாசலில் கட்டி தொங்கவிடுகின்றோம். வாங்கவீட்டிற்குள் கண்ணுக்கு தெரியாத எந்தவொரு கண் திருஷ்டியாக இருந்தாலும், கெட்ட சக்தியாக இருந்தாலும், நுழையாமல் இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்போம். வீட்டிற்குள் நுழைபவர்களின் கெட்ட எண்ணம் வாசலிலேயே நிற்க வேண்டும் என்பதற்காக, நாம் பல பரிகாரங்களை செய்திருந்தாலும், எல்லாவற்றையும்விட ஒரு சுலபமான பரிகாரம் உள்ள இப்படி செய்யும் பட்சத்தில் வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்காது. வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். சண்டை சச்சரவுகளுக்கு வாய்ப்பில்லை. சுபகாரிய தடை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

2 எலுமிச்சை பழங்களை எடுத்து கொண்டு அதை நான்கு பாகங்களாக பிளந்து கொள்ளவும். அதை நான்கு துண்டுகளாக வெட்டக்கூடாது. பிளக்கப்பட்ட எலுமிச்சை பழத்தின் உள்பக்கத்தில் உப்பை முழுமையாக நிரப்பி, அதில் 2 மிளகு போட்டுங்கள்.பின் எலுமிச்சை பழத்தின் நான்கு வெளி பாகத்திலும், மேல் பகுதியிலும் என மொத்தம் 5 பகுதியிலும் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து விட வேண்டும்.இதை போன்றே 2 எலுமிச்சை பழத்தை நில வாசப்படியின் இருப்பக்கத்திலும் சிறிய தட்டின் மீது வைக்க வேண்டும். புள்ளிகள் இல்லாத எலுமிச்சை பழத்தை மட்டுமே திருஷ்டி கழிக்கவும், இது போல வாசலில் வைக்கவும் பயன்படுத்த வேண்டும். இதை வெள்ளிக்கிழமை அன்று காலையில் தான் செய்ய வேண்டும். அடுத்து வரும் வியாழக்கிழமை அன்று அந்த எலுமிச்சை பழத்தை கால் படாத இடத்திலோ அல்லது ஓடும் தண்ணீரிலோ போட்டு விடலாம்.மீண்டும் வெள்ளிக்கிழமை இதே போல் எலுமிச்சை பழத்தை தயார் செய்து, வீட்டு வாசலில் பாதுகாப்பிற்காக வைத்து விட்டாலே போதும்.

எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து நல்ல சக்திகளை கொடுக்கக்கூடிய தன்மை எலுமிச்சை பழத்திற்கு உண்டு. எலுமிச்சை பழத்தை அதனால் தான் தேவகனி என்று வர்ணிக்கின்றனர். எனவே வீடு மிகவும் பாதுகாப்பாக இருப்பதை மன ரீதியாக உணர முடியும். நீங்களும் இதை செய்து பாருங்கள்.

Previous articleவிருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி
Next articleபலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?