பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது? முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு பேச்சு! 

0
310
#image_title

பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது? முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு பேச்சு! 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது என முன்னாள் முதல் மந்திரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 1ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உரையாற்ற இருக்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்கும் தலைவர்களில் ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பாரூக் அப்துல்லாவும் ஒருவர்.  பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ள பரூக் அப்துல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருப்பதாவது,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயக விதிப்படி உட்பட்டு முறையான தேர்தல் நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரல். மு.க.ஸ்டாலின் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது? என்று கேள்வியை எழுப்பிய பருக் அப்துல்லா  எல்லா எதிர்கட்சிகளும் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தபின் பிரதமர் வேட்பாளர் பற்றி ஒரு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

 

Previous articleலியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதா? விமான நிலையத்தில் விஜய்!
Next articleசர்க்கரை நோய் குணமாக சூப்பர் டிப்ஸ்! இந்த காயை மோரில் ஊற வைத்து குடித்தால் போதும்!