ஓடிடி தளங்களிலேயே பாய்போட்டு படுத்த சூர்யா குடும்பம்!! இது தான் சீக்ரெட்டாம்!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை மற்றும் தம்பியும் திரைத் துறையில் இருப்பவர்கள் தான். சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக படங்களை தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறார்.

என் நிலையை தற்போது நடிகர் சூர்யா இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதனை வருகின்ற ஜனவரியில் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்திற்கு பின்னர் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். சூர்யா நடிக்கும் மற்றும் தயாரிக்கும் படங்கள் அனைத்துமே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவருகின்றன. முன்பெல்லாம் தியேட்டர்களை நம்பிதான் திரைப்படங்கள் வெளிவந்தன. தற்போது தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் தியேட்டரை விட ஆன்லைன் தளங்கள் பயனுள்ளதாக இருப்பதாக கருதுகின்றன.

நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் உருவாகியுள்ளது. இது ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இதில் நடிகர் சூர்யா அந்த மக்களுக்கு நியாயம் வாங்கித் தரக் கூடிய வழக்கறிஞராக நடித்திருக்கிறார்.‌

தியேட்டர்கள் பிறந்த பின்பும் கூட சூர்யாவின் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றது. சமீபத்தில் நடிகை ஜோதிகாவின் உடன்பிறப்பே திரைப்படமும் வெளியாகியது. இப்படி தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகாவின் திரைப்படங்களை புறக்கணிப்பது தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இருப்பினும் நடிகர் சூர்யா சென்சார் உள்ளிட்ட விஷயங்களுக்கு பயந்து ஓடிடி தளங்களை தேர்ந்தெடுக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரது ஜெய்பீம் திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் ஓபனாக பேசப்பட்டுள்ளது. இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டால் மிகப்பெரிய சர்ச்சையாகும்.

மேலும் படங்களில் நிறைய விஷயங்களை கட் பண்ணி எடுத்து விடுவார்கள் என்பதால், படத்தின் சுவாரசியம் குறைந்துவிடும். இதனால்தான் சூர்யா ஓடிடி தளத்தை தேர்ந்தெடுத்தார் என்று கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment