இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!

Photo of author

By Rupa

 

இனி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் Wi-Fi வசதி.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!

தமிழக அரசானது பல நலத்திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் இலவச நோட்டுப் புத்தகங்களில் தொடங்கி அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் வரை அனைத்தையும் கொடுத்து வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வந்தது.இதன் மூலம் தன்னார்வலர்கள்  பலர் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் மேம்படுத்தப்பட்ட வகுப்புகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

அதில் ஒன்றுதான் மாணவர்களுக்கு ப்ரொஜெக்டர் மூலம் பாடம் எடுக்கும் நடைமுறை. இதன் மூலம் பல மாணவர்களின் கற்றல் திறனை எளிமையாக்க முடியும். மேற்கொண்டு மாணவர்களுக்கும் படிப்பின் மீது உள்ள ஆர்வமும் அதிகரிக்கும்.அந்த வகையில் நவீனமயமாக்கப்பட்ட பிராக்டிகல் லேப் உள்ளிட்டவைகளை கொண்டு வருகின்றனர்.அதிலும் இந்த காணொளி வாயிலாக மாணவர்கள் பாடம் கற்பிக்கும் பொழுது அதன் ஈடுபாடு சற்று அதிகரிக்கக்கூடும்.

அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் இணையதள சேவையானது பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து ஐந்து முதல் ஆறு எம்பிபிஎஸ் என்ற இணைய வேகத்தை கொடுத்து வந்தது.தற்பொழுது இதன் இணையதள இணைப்பின் வேகத்தை அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர்.இதன் மூலம் மாணவர்களுக்கு அதிகப்படியான வகுப்புகள் எளிமையான முறையில் எடுக்க முடியும்.தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முறையாக இந்த இணையதள வசதியானது செயல்பாட்டிற்கு வரவில்லை.வரும் ஜூன் மாதம் மூன்றாம் வாரத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதி கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.