ஆபாச படத்திற்கு அடிமையான மனைவி..!! அடிக்கடி சுய இன்பம்..!! விவாகரத்து கேட்ட கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்..!!

0
7

மனைவி தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது, கணவனுக்கு கொடுமை செய்வதாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

தன்னுடைய மனைவி ஆபாசப் படத்திற்கு அடிமையானதாகவும், அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்றும் அவருக்கு பால்வினை நோய் இருப்பதாகவும் கூறி, அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீமன்ற கிளையில், அந்த பெண்ணின் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஒரு பெண் தனிமையில் ஆபாசப் படங்கள் பார்ப்பதையும், சுய இன்பம் செய்வதையும், கணவருக்கு இழைக்கப்படும் கொடுமையாக கருத முடியாது.

மேலும், தனது மனைவிக்கு பால்வினை நோய் இருப்பதை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் கணவர் சமர்ப்பிக்கவில்லை. அதே சமயம், வாழ்க்கைத் துணையை ஆபாசப் படங்களைப் பார்க்குமாறு வற்புறுத்தினால், அது விவகாரத்துக்கான காரணமாக ஏற்றுக் கொள்ள முடியும்” என்று கூறி கணவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Previous articleமருத்துவ காப்பீடு எடுக்கும் பொழுது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!!
Next article’அவரு ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்’..!! செந்தில் பாலாஜியை வெச்சி செய்த தமிழிசை..!!