கரூர் மாவட்டத்தில் கணவர் செய்த காரியத்தால் மனைவி தீக்குளிப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

கரூர் மாவட்டத்தில் கணவர் செய்த காரியத்தால் மனைவி தீக்குளிப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர்  வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது  மகன் ராமசாமி இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி காளியம்மாள் இவருடைய வயது 35. இவர் இருவருக்கும் இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.

இந்நிலையில் ராமசாமி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். மது போதைக்கு அடிமையான இவர் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் மனைவியை அடித்துக் கொடுமை செய்து வந்துள்ளார். அவ்வப்போது இவர் குடித்து விட்டு தலைகால் நிக்காமல் சுயநலவை இழந்து சாலையில் கீழே விழுந்து கிடப்பார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி அன்று வீட்டில் இருந்த காளியம்மாள் மற்றும் அவளது மூன்று பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ராமசாமி மது அருந்திவிட்டு காளியம்மாளுடன் பிரச்சினை செய்து வந்துள்ளார். இப்பிரச்சனை முற்றியது இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டின் உள்ளே சென்று கதவை தாப்பாளிட்டுள்ளார்.

குழந்தைகள் கூச்சல் போடவே அதற்குள் காளியம்மாள் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். குழந்தைகளின் கூச்சல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவர் உடல் முழுவதும் பற்றி இருந்த தீயை அணைத்துவிட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த காளியம்மாள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் நேற்று பன்னிரண்டாம் தேதி வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.காளியம்மாள்  தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment