சிறுமியை தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர்… போட்டி முடிந்ததும் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

0
200

சிறுமியை தாக்கிய ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர்… போட்டி முடிந்ததும் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ள டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்குப் பிறகு தற்போது ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியுள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 5 சிக்ஸ்களை விளாசி அரைசதம் அடித்தார்.

இந்த போட்டியில் அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் படைக்காத சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்களை விளாசி சாதனைப் படைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அவர் 126 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 230 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹிட்மேன் ரோஹித் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த சிறுமியின் மேல் பட்டு அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பிஸியோதெரபிஸ்ட் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்தார். போட்டி முடிந்த பின்னர் ரோஹித் ஷர்மா அந்த சிறுமியை சந்தித்து அவருக்கு பொம்மை ஒன்றை பரிசாக அளித்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Previous articleகரூர் மாவட்டத்தில் கணவர் செய்த காரியத்தால் மனைவி தீக்குளிப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!..
Next articleபள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவன் பரிதாபமாக பலி ! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here