சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒன்றாவது நாம் கேள்விபடுகிறோம். நாளுக்கு நாள் இந்த குற்றங்கள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. எனவே பெண்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கோவையில், காந்தி மாநகர் பகுதியில் கவிதா என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, லவேந்திர குமார் என்ற இலங்கைத் தமிழர் ஒருவருடன் கவிதாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்த குமார் கோவையில் பழைய கட்டடங்களை உடைக்கும் பணி செய்து வருகிறார். இவருக்கும் கவிதாவிற்கும் ஓர் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கவிதா அடிக்கடி வேறு யாருடனும் போன் பேசுவதால், லவேந்திரன் ஆத்திரமடைந்து அவ்வப்போது சத்தம் போட்டு வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கவிதாவின் சகோதரர் நாகராஜன் அவர்களின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு கவிதா இல்லை. லவேந்திரனிடம் கேட்டபோது, போன் பேசாதேன்னு சொன்னதுக்கு உங்க அக்கா, ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டா என்றும், அவ போய் ஒரு வாரம் ஆச்சு, வரட்டும் வந்தாள் அவளை வந்தா முடிச்சுக் கட்டிடுறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அன்றிரவு அவர்கள் வீட்டில் கவிதா கதறும் சத்தம் கேட்கவே கவிதாவின் தம்பி நாகராஜன் பதறி போய் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, கவிதாவை, லவேந்தரன் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொண்டிருந்துள்ளார்.
மேலும், சிறிது நேரத்திலயே கவிதா ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி உயிரிழந்துள்ளார். நாகராஜனைப் பார்த்தவுடன் லவேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப் பற்றி நாகராஜன் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து லவேந்திரனைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.