பிக் பாஸ் வீட்டுக்கு வைல்ட் கார்ட் மூலம் நுழைய போகும் பிரபலம்.!!

Photo of author

By Vijay

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் நுழைய போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இதுவரை நான்கு சீசன் களை கடந்து.தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய், சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரைச்செல்வி, சி.பி சந்திரன், நந்தகுமார் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.

இதில் கடந்த வாரம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நமிதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிக் பாஸ் சீசன் 5 முதல் எலிமினேஷனில் மலேசியாவை சேர்ந்த நாடியா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வரும் வாரம் நடக்கும் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நேற்றைய நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தயாரிப்பாளர் ரவீந்தர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.