மின்வாரியத்தில் சரியாக வேலை நடக்கிறதா என்று சோதனை செய்ய வந்த காட்டு யானைகள்!
கேரளா வனப்பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ளது மருதமலை வனப்பகுதி.இந்த பகுதயில் எப்போதும் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.தற்போது பொழிந்து வரும் மழைகாரணமாக யானைகள் தற்போது தடாகம் , மருதமலை வனப் பகுதிக்குள் வந்துள்ளன.
அதன் பின்பு 8 யானைகள் கொண்ட கூட்டம் வனப்பகுதியை விட்டு மருதமலை பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்தது.பின்பு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சுற்றி திரிந்து அங்கு இருந்து திடீர் என்று 6 யானைகள் அருகாமையில் இருந்த துணை மின் நிலையத்தின் கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது .
இதை கண்ட லைன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கேங்மேன் மணிமாறன் ஆகியோர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் ஊழியர்கள் யானைகளை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பிறகு பலமணிநேரம்போராடிய பிறகு யானைகள் மருதமலை வணப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.மின்சார ஊழியர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் யானைகள் உயிரை காப்பற்றப்படதாக தெரிவித்தனர்.