ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!!

0
104
Will AI cause unemployment? This is the first state to implement it!!
Will AI cause unemployment? This is the first state to implement it!!

ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!!

உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள்.

இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வருகிறது.

நாம் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் முறைகளில் முக்கியமான ஒன்று தான் ஆண்டிராய்டு மொபைல் போன். தற்போது தொழில்நுட்பத்தில் புதியதாக ஜெனரேட்டிவ் ஏஐ சாட்போட் ஆன சாட்ஜிபிடி- யின் ஆண்டிராய்டு செயலி ஒன்று இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது அறிமுகபடுத்தப்பட்ட சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டு வந்தது. இதில் இருக்கக்கூடிய சிறப்பம்சங்களான,
இது சாட்போட் பயனர்கள் கேட்கின்ற அனைத்து கேள்விகளுக்கும் சுலபமாக பதிலளிக்கும். நாம் கேட்கின்ற கதை, கட்டுரை, கவிதை மற்றும் கம்ப்யூட்டர் என அனைத்திற்குமே நமக்கு பதில் அளிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு இதில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த செயலியை இந்தியாவில் மட்டும் அல்லாமல், அமெரிக்கா, வங்காளாதேஷ் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும், இந்த செயலியை ஏற்கனவே, ஐபோன் பயனாளர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி பயனளிக்கும் என்றாலும், பணியாளர்களின் வேலை பறிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை கோவா மாநில அரசு கையில் எடுக்க உள்ளது.

இது குறித்து பேசிய கோவா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரோகன் கவுண்டே, மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி சிறப்பான முறையில் செயல்படும் என்றும், இது மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக இதை chatboats- கள் சுற்றுலா மற்றும் மக்களின் குறைதீர்க்கும் துறைகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

அடுத்த கட்டமாக சுற்றுலா, பதிவுத்துறை, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத்துறை, பிரிண்டிங், பல்போருல்துரை, ஆவணங்கள், ஐடி துறை போன்றவற்றில் மக்களுக்கு தேவையான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தற்போது முப்பது கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!
Next articleசுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘மூங்கில் யானை’ கூட்டம்!!