அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு!
சென்னையில் உள்ள வானகரத்தில் வருகின்ற 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாத 23ம் தேதி கட்சி பொது குழு கூட்டம் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இதனிடையே, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு நடத்தலாம் என உத்தரவிட்டது. இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை நான்காம் தேதி நடைபெற்றது.
அதிமுக பொதுக்குழு நடக்குமா நடக்காதா என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உடனே அதிமுக தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தொடங்கினார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி 100 பேர் அமரக்கூடிய வகையில் 2000 சதுர அடியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் பதினொன்னாம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு வருகை தரும் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படும் என பெஞ்சமின் அறிவித்தார். கடந்த முறை பொதுக்குழு நடைபெற்ற போது, அடையாள அட்டையில் உறுப்பினர்கள் புகைப்படம் இடம் பெற்றிருந்த நிலையில், போலி அட்டைகள் பயன்படுத்தினர்.
இதனை தடுக்க இந்த முறை அடையாள அட்டையில் கியூஆர் ஸ்கேன் சோதனை செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் பொதுக்குழுவில் எந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. குறிப்பாக ஒற்றை தலைமை விவகாரம் எவ்வாறு முடிய போகிறது என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது