தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? – மக்கள் எதிர்பார்க்கிறார்களா?

கொரோனா என்ற தொற்றுநோய் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. நம் இந்திய நாட்டிலும் இந்த நோய்க்கு பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சில முக்கிய தளர்வுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. 

இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் முழுமையாக திரும்பவில்லை. தற்போது வருகின்ற பண்டிகை காலத்தையொட்டி சில அத்தியாவசிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த தீபாவளிப் பண்டிகைக்கும் தமிழக அரசு ஏதும் பரிசு வழங்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

அவ்வாறு வருகின்ற செய்தியும் வைரலாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசிடம் இருந்து அரிசி  குடும்ப அட்டைதாரர்களுக்கு, வேட்டி, சேலை, பொங்கல் திருநாளன்று உபயோகிக்க தேவையான பொருட்கள் உள்பட ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணம், இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். 

தற்போது “தீபாவளி பண்டிகைக்கும் ரூபாய் இரண்டாயிரம் தமிழக அரசு வழங்கும்” என்பது போன்ற செய்திகளை வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Comment