நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் பயிற்சி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

0
84

பன்னிரண்டாம் வகுப்பு  படித்தபிறகு, நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகள் படிக்க அனுமதி அளிக்கப்படும். அவ்வாறு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தோல்வி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் நீட் தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதனால் அரசு பள்ளி மாணவர்கள் எந்த விதத்தயக்கமும் இன்றி மீண்டும் நீட் தேர்வை துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தியையும், 58 வது குருபூஜையையும் முன்னிட்டு ஈரோட்டில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திரு உருவ படத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார் அமைச்சர் செங்கோட்டையன்.

செய்தியாளர்களை சந்தித்த போது மேற்கூறிய தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி அதிமுக அரசு மக்களுக்காக அனைத்து நற்ப்பணிகளையும் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் தங்களை நீட் தேர்வு எழுதுவதற்கு முறையாக தயார்படுத்தி கொள்ளலாம் என்ற நற்செய்தியையும் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K