ஏ ஆர் முருகதாஸ் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா?வியப்பில் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

ஏ ஆர் முருகதாஸ் இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா?வியப்பில் ரசிகர்கள்!

Parthipan K

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார்.

ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் பற்றி அவர் கூறியிருக்கும் விதம் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்தப் படத்தின் மூலம் தமிழர்களுக்கு தமிழர் என்னும் உணர்வை ஊட்டியவர் ஏ ஆர் முருகதாஸ் என்றே கூறலாம் 

தமிழில் இதுவரை 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஏழாம் அறிவு படத்தில் இவரது இயக்கமும் வசனமும் சூர்யாவின் நடிப்பும் பெரிய ஹிட் ஆயின. மேலும் இந்த படத்தில் வில்லனாக டாங்லி என்னும் சீன நடிகரை அறிமுகப்படுத்தி இருப்பார்.

சூர்யா, ஸ்ருதிஹாசன், டாங்லி நடிப்பில் வெளியான இந்தப் படம் 2011 பெரிய ஹிட்டடித்தது. டி இமான் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்தது.

இன்று ஏஆர் முருகதாஸின் பிறந்தநாளையொட்டி இதுவரை யாரும் கண்டிராத  ஏ ஆர் முருகதாஸ் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.