இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. மேலும் இந்திய அணி இந்த தொடரில் கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்கும்.
இந்நிலையில் இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது 8 ஓவர்கள் மட்டுமே வீசி வெளியேறினார். அதன் பின் அவர் ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மீண்டும் அவர் அணிக்கு திரும்ப வில்லை எனவே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இரண்டாம் நாள் முடிவில் பிரசித் கிருஷ்ணா கூறுகையில் அவர் முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார் . ரிப்போர்ட் வந்த பிறகு அவர் எப்போது விளையாடுவார் என்பது தெரியும் என்று கூறியுள்ளார்.