முதலமைச்சர் வீட்டின் முன்பு நடிகர் சிம்பு அம்மா உண்ணாவிரதம்!

Photo of author

By Parthipan K

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக சிம்பு மாறி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது.இந்த மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீபாவளி போட்டியிலிருந்து விலகி கொள்வதாகும், மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நடிகர் சிம்புவின் அப்பா மற்றும் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில் மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வர விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் கட்ட பஞ்சாயத்து நடைபெறுவதாக கூறினார். அன்பானவன், அசாராதவன், அடங்காதவன் திரைப்படத்தின் தாயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்த பணமும் கொடுக்க தேவை இல்லை, ஆனால் அவ்வாறு அவர் அவதூறு பரப்பி வருகிறார், தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து நடந்து வருகிறது, இதற்கு தயாரிப்பாளர் சங்கம் மறைமுகமாக உதவுகிறது எனக் கூறினார்.

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை என்றால் முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன் எனவும் கூறினார்.