நமது சிறுநீரகம் பல விஷயங்களை செய்கின்றது.உடலில் படியும் கழிவுகளை அகற்றி உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.சிறுநீரகத்தில் அழுக்கு மற்றும் யூரிக் அமிலம் அதிகளவு குவிந்ததால் கற்கள் உருவாகி விடும்.
சிறுநீரகத்தில் கற்கள் படிந்தால் வயிறு வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நமது சிறுநீரகத்தில் திடமான பொருள் அதாவது கல் போன்று உருவாகும்.
சிறுநீரக கல் அறிகுறி:-
1)வாந்தி உணர்வு
2)குமட்டல் பிரச்சனை
3)இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல்
4)சிறுநீர் வெளியேற்றும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வு
5)சிறுநீர் கழிப்பதில் சிரமம்
சிறுநீரக கல் உருவாக காரணங்கள்:-
1)தண்ணீர் பருகாமை
2)சிறுநீரகத்தில் அதிக உப்பு படிதல்
3)யூரிக் அமிலம் அதிகரித்தல்
4)உடல் உழைப்பு இல்லாமை
5)சிறுநீரை அடக்கி வைத்தல்
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள்:
1.அதிக உப்பு உணவுகள்,அதிக காரம் மற்றும் அதிக புளிப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
2.சிட்ரஸ் பழங்கள்,புளிப்பு நிறைந்த பழங்கள் சாப்பிடக் கூடாது.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:
1.பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்கள்
2.பருப்பு வகைகள்
3.வாழைத்தண்டு ஜூஸ்
4.பீன்ஸ் பானம்
அதேபோல் சிறுநீரக கற்களை கரைக்க இளநீர் குடிக்கலாம்.இளநீரில் இருக்கின்ற பொட்டாசியம் என்ற சத்து சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது.இந்த பொட்டாசியம் சத்து சிறுநீரகத்திற்கு காரத் தன்மை அளித்து கற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது.
தினமும் ஒரு இளநீர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.இளநீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.இளநீரில் இருக்கின்ற மெக்னீசியம் சத்து சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.