நம் உடலுக்கு தேவையான புரதச்சத்தை வழங்கும் முட்டையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.ஆனால் முட்டை சாப்பிட்டால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடியவை.எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முட்டையை கொண்டு சாலட் செய்து சாப்பிடுங்கள்.
தற்பொழுது உடல் பருமன் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.மோசமான உணவுப்பழக்கங்களை பின்பற்றி உடல் எடையை அதிகப்படுத்திவிடுகின்றனர்.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முட்டை உள்ளிட்ட சில வகை பொருட்களை கொண்டு ஆரோக்கியமான சாலட் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளரி – ஒன்று
2)முட்டை – ஒன்று
3)தக்காளி – ஒன்று
4)பெரிய வெங்காயம் – ஒன்று
5)கேரட் – ஒன்று
6)மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
7)உப்பு – தேவையான அளவு
8)தயிர் – ஒரு தேக்கரண்டி
9)கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு முட்டையை வேகவைத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு தக்காளி பழம் மற்றும் ஒரு பெரிய வெங்காயத்தை தோல் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து கொத்தமல்லி தழையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நறுக்கிய தக்காளி,வெங்காயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய்,கேரட் ஆகியவற்றை அதில் சேர்க்க வேண்டும்.
அடுத்து தயிர்,உப்பு,மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதற்கு அடுத்து முட்டை துண்டுகளை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இப்படி சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறைந்துவிடும்.