கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

Photo of author

By Divya

கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

Divya

நாம் முக்கியமாக பாதுகாக்க வேண்டிய ஒரு உறுப்பு கண்.இந்த உலகத்தை பார்க்க நமது கண் உதவுகிறது.கண் பார்வை திறனை நாம் மேம்படுத்தினால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணியும் ஏற்படாமல் இருக்கும்.பார்வை குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று கிட்டப் பார்வை மற்றொன்று தூரப்பார்வை.

இன்று பெரும்பாலானோர் கண்ணாடி அணிகின்றனர்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணாடி அணிகின்றனர்.அதிக நேரம் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துதல்,பிறவி குறைபாடு,கண்களில் பிரச்சனை போன்ற காரணங்களால் பார்வை திறனை குறைகிறது.

கண் பார்வை திறன் குறைய காரணங்கள்:

**கண்புரை பாதிப்பு
**மாகுலர் சேதம்
**கண் நரம்பு பிரச்சனை
**மாலைக்கண் நோய்
**கண் நோய் தொற்று

ஒருமுறை கண்ணாடி அணியும் நிலை வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதே நிலை தான் நீடிக்கும்.சிலரால் கண்ணாடி அணியாமல் பார்ப்பது கடினமாக இருக்கின்றது.கண் பார்வை திறனை அதிகரிக்க உணவுமுறையில் அக்கறை செலுத்த வேண்டும்.வைட்டமின் ஏ உணவுகள் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.அதேபோல் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழம்,பாதாம் பருப்பு,மாம்பழம்,உருளைக்கிழங்கு,கேரட் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறம் மேம்படும்.சிலர் கண் பார்வை திறனை அதிகரிக்க கண் பயிற்சி செய்கின்றனர்.கண்களை சுழலச் செய்தல்,கண் யோகா,கண்களை நன்றாக சிமிட்டி பார்ப்பது போன்ற பயிற்சிகளை செய்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் கண் பயிற்சி செய்வதால் கண் பார்வை திறன் அதிகரிக்கும் என்று எந்த ஆய்வுகளும் தெளிவுபடுத்தவில்லை.கண் பயிற்சி செய்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்படாத உண்மை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.