முன்னாள் அமைச்சர்  பொன்முடி இடத்தை  நிரப்புவாரா புகழேந்தி?

0
141

திமுகவின் விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி அண்மையில் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்ந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எல்லாரிடமும் இருந்தது.

விழுப்புரம் மாவட்டம் அத்தியூரை சேர்ந்த புகழேந்தி 1973 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார் .மேலும் இவர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் பொன்முடிக்கு மிகவும்  நெருக்கமானவர்  ஆவார். மேலும் இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 18) வெளியிட்ட செய்திக்குறிப்பில் “துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற அடிப்படையில் தனது மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.இதனையடுத்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல மாவட்ட அவைத் தலைவராக சந்திரனும் துணைச் செயலாளராக டிஎன் முருகனும் நியமிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.துரைமுருகன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleSBI -ல் காலிப்பணியிடம்
Next articleஅதிமுகவின் செயற்குழு கூட்டம் செப் 28 ல் கூடுகிறது!இபிஎஸ்-ஓபிஎஸ் அறிவிப்பு!