அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக பல இலவச அறிவிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள் தற்போது சூடு பிடிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதோடு அரசியல் கட்சிகள் தேர்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து டெல்லியைச் சார்ந்த அஷ்வினி உபாத்பாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் இந்த மனு தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இது மிகவும் முக்கியமான பிரச்சனை நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஒரு பிரச்சனை என தெரிவித்திருந்தது.
அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம், நிதி ஆயோக், போன்றவற்றுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது இந்த வழக்கில் அஸ்வினி உபாத் பாய் தரப்பில் நேற்று வாதிடப்பட்டது.
அதாவது மக்களின் வரிப்பணத்திலிருந்து இலவச பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பெரும்பாலான மாநிலங்கள் கடுமையான கடன் சுமையிலிருக்கின்றன.
இந்தநிலையில், இலவச அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டால் அந்த சுமை மக்கள் மீது திணிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இருந்தாலும் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்னர் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.