திருமணம் நிச்சயக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் தூக்கு போட்டு திடீர் தற்கொலை! விழுப்புரம் அருகே சோகம்!

0
197

திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருக்கின்ற இ மண்டகமேடு கிராமத்தைச் சார்ந்தவர் அய்யனார் மகன் மருது பாண்டியன் பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு எதிர்வரும் 28ஆம் தேதி திருமணம் செய்ய உறவினர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மருது பாண்டியன் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் மருதுபாண்டியன் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆகவே மருது பாண்டியன் தற்கொலை செய்வதற்கு முன்னர் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் மாமா உனக்கும், உன் மனைவிக்கும், விருப்பப்பட்டு தான் பெண் கொடுப்பதாக நினைத்தேன். ஆனால் உன் மனைவிக்கு விருப்பமில்லை நீங்கள் நினைத்தபடி உன்னுடைய மச்சானுக்கு கொடுத்து விடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

Previous articleஅரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தடுக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் சூடு பிடித்த விவாதம்!
Next articleபொதுநலனில் யாருக்குமே அக்கறை இல்லை! உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here