2024 ஆம் நிதி ஆண்டின் இந்து சமய மானிய கோரிக்கைக்கான 700 பின்தங்கிய ஜோடிகளுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து காதலர் தினத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுக்க, நாலு கிராம் தங்கத் தாலி மற்றும் 60 ஆயிரம் மதிப்பிலான கட்டில், பீரோ, கிரைண்டர்,மிக்ஸி, பாத்திரங்கள் ஆகியவை ஒவ்வொரு ஜோடிக்கும் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது. கல்யாண ஜோடிகளை வாழ்த்தி தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர், “கோலாகலமாக முப்பது ஜோடிகளுக்கு திருமணம், மக்கள் முன்னிலையில் காதலர் தினத்தன்று மிக மகிழ்ச்சியாக இந்து அறநிலைத்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ளது”.
பொதுவாக காதல் தினத்தை கொண்டாடக்கூடாது என்பார்கள்! ஆனால் பந்தத்தை இணைக்கும் காதலை கொண்டாடாமல் இருக்க முடியுமா? இங்குள்ள ஜோடிகள் அனைவரும் நட்புடனும், காதலுடனும் மிகச் சிறப்பாக வாழ வேண்டும். இதுவரை தோராயமாக 1800 திருமணங்களை நடத்தி வைத்ததாக பெருமிதம் கொண்டுள்ளார். இன்னும் 700 திருமணங்களை நடத்தி வைக்க போவதாக கூறியுள்ளார். இங்குள்ள மகளிர் பெரும்பாலும் பட்டதாரிகள் என்பது திராவிட மாடல் அரசின் பெருமை. கல்வி சதவீதம் 47 ஆக உயர்ந்துள்ளது தமிழ்நாட்டில். அறிஞர் அண்ணா கூறியது போன்று, வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். இங்குள்ள பெண்கள் எல்லாம் வீட்டின் நலனில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டை முதல்வர் பார்த்துக் கொள்வார் என்றுள்ளார். திமுக அரசின் திட்டங்களை உலகமே பாராட்டி வருகின்றது அதிலும் முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை, புதுப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என பல திட்டங்கள் அடுக்கடுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்வரின் அறிவுரையின்படி, குறிப்பாக இன்னும் மூன்று மாதங்களில் மகளிர் உரிமை தேவை பெரும் மகளிர் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படும். இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் உதவித்தொகை வாங்கி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.