பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?…

0
172

பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்ளுமா?…

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. கடைசியாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி 2013 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின.

ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் மோதும் போட்டிகள் உலகளவில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளன. சமீபத்தில் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அடுத்து வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உலகக்கோப்பை தொடரில் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்தீர்ந்தன.

இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு அனுமதி அளித்தால் பாகிஸ்தான் செல்ல தயாராக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இதனால் அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அடுத்த் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் 50 ஓவர் போட்டிகளாக நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபுது வீட்டில் மீண்டும் ஒன்றாக வாழப்போகும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி!
Next articleரஜினியின் அடுத்த படத்தில் ராஜமௌலியின் தந்தை… பரபரப்பாக நடக்கும் பணிகள்!