அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

0
168

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கே எஸ் ரவிக்குமார்?டிவிட்டரில் என்ன நடக்கிறது?

அஜித் நடிக்கும் அடுத்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் எனப் போற்றப்படும் கே எஸ் ரவிக்குமார் இயக்க இருப்பதாக டிவிட்டரில் வெளியான தகவலால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரையும் வைத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் வெற்றி பெறாததால் ஆந்திர மற்றும் கன்னட தேசங்களில் அடைக்கலமாகி பழைய ஹிட் படங்களை ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திடீரென தமிழ் ரசிகர்களின் பேசுபொருளாக ஆகியுள்ளார் ரவிக்குமார். அதற்குக் காரணம் அவர் அஜித்தை அடுத்த படத்தில் இயக்கப் போவதாகவும் அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான செய்திகளே. யாரோ ஒரு நபர் டிவிட்டரில் இந்த செய்தியைக் கொளுத்திப் போட ரணகள்மானது டிவிட்டர். ஏனென்றால் கே எஸ் ரவிக்குமார் ஏற்கனவே அஜித்தை வைத்து வில்லன், வரலாறு என இரு ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது உண்மையா இல்லை பொய்யா என்று விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கே எஸ் ரவிக்குமார்.

இதையடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் ‘அன்பான நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு… நேற்று முதல் ஒரு வதந்தி வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜித்தை நான் இயக்கப் போகிறேன் என்று. ஆனால் அது உண்மை இல்லை. மேலும் எனக்கு டிவிட்டரில் எந்த கணக்கும் இல்லை. அதனால் டிவிட்டர் மூலம் என் சம்மந்தமாக வரும் எந்த விஷயத்தையும் நம்ப வேண்டாம்.’ எனத் தெரிவித்து பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது அஜித் ஹெச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தில் அவர் கவனம் செலுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Previous articleகொரோனாவிடம் இருந்து தப்பிய அதிசயக் குழந்தை – சீன மக்கள் மகிழ்ச்சி !
Next articleதிமுகவின் கையெழுத்து போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான ஒன்று! நடிகர் ராதாரவியின் பரபரப்பான பேச்சு..!!