பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு!
இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று காலை நடைபெற உள்ளது.இதில் மத்தியில் ஆளும் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் திரிணமுல் துணைத் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்திலுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டெல்லி சென்று வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள் சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டசபை அலுவலக வளாகத்தில் வாக்களிக்க உள்ளார்கள்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 14-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பாரா? உடல் நிலை சீராக இருக்கிறாதா ? என்ற சந்தேகம் எழுந்தது.
இது குறித்து அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியிருப்பதாவது ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார் என கூறியிருந்தார்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.