சிபிஎல் : நான்காவது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்குமா பொல்லார்டு அணி?

Photo of author

By Parthipan K

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி போட்டியில் மூன்று முறை பட்டம் வென்ற கிரண் பொல்லார்டு அணியான  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தன. அதன்படி முதலில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.  டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி 19.1 ஓவரில் 154 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு 155 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.