ஐஸ்வர்யா ராஜேஷை தோற்கடிப்பாரா ரெஜினா கெஸன்ட்ரா?….

0
243

சினிமா துறையில் உள்ள பல முன்னணி நடிகைகள் தனது டிஆர்பி-யினை பெருக்கிக்கொள்ள எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கிறார்கள்,ஆனால் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க முன்வருவதில்லை, இப்படி நடிப்பது தனது பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைப்பது போல் இருக்கிறதோ என்னவோ!

இவ்வாறாக இருக்க கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி தனுஷ்,வெற்றிமாறன் ஆகியோரின் தயாரிப்பில்,மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காக்கா முட்டை இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே யுக்தியை மற்றுமொரு நடிகை கையாண்டுள்ளார்.பல வருடங்களுக்கு முன்பு மவுஸ் குறைவாக இருந்த நடிகைதான் ரெஜினா கெஸன்ட்ரா.அதன்பிறகு பட வாய்ப்புகளை பெருக்குவதற்காக பல ஒர்க்கவுட் வேலைகளை செய்து தனது உடலை ஜிம் பாடி போல் மாற்றிய ரெஜினாகெஸன்ட்ரா கவர்ச்சி பாடல்கள் மற்றும் சீன்களிலும் நடித்துள்ளார்.இந்த வரிசையில் Mr.சந்திரமௌலி படத்தில் உள்ள “ஏதேதோ ஆனேனே” பாடலும் ஒன்று.

அதன் பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை தற்போது 12 வயது குழந்தைக்கு தாயாக படமொன்றில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரெஜினா கெஸன்ட்ரா.விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முகில் என்னும் திரைப்படத்தில் நடித்து வரும் ரெஜினா கஸன்ட்ரா அப்படத்தில் விஜய் சேதுபதியின் 12 வயது மகளுக்கு தாயாக நடித்து வருகிறார்.

ரெஜினாவின் இத்தகைய நடிப்பு நடிகைகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்புக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்ற இவரது கருத்துக்கு பதில் முகில் படத்தின் வெளியீடு அன்று தான் பதில் தெரிய வரும்.

எது எப்படியோ ஐஸ்வர்யா ராஜேஷை ரெஜினா தோற்கடிப்பரோ இல்லையோ அது ஒருபுறமிருக்க வெளியாகும் படம் நல்லதொரு கருத்தினை மக்களுக்கு தெரிவித்தால் நல்லது தானே.

Previous articleவிரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!
Next articleடுடே பங்கு சந்தை நிலவரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here