பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி?

Photo of author

By Parthipan K

பள்ளியில் மதம் சார்ந்த பழக்கவழக்கம் தொடரும்?  உச்சநீதிமன்றத்தின் கேள்வி?

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வரத் தடை விதிக்கப்பட்டது . அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தடையை நீக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.அதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று உச்சநீதின்றம் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் ஹேமந்த் குப்தா ,சுதான்ஸி துலியா ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது .

அவர்கள் மதம்சார்ந்த பழக்கவழக்கங்களை கடைபிடித்து அரசமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமை என கூறினார்கள். மாணவர்கள் சீருடை அணிந்துவந்தால் கல்வி வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பெண்களுக்கான கல்வி உரிமையை அரசு எப்போதும் மறுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். மேலும் முஸ்லிம் பெண்கள் ஹிஜிப் அணிந்து பள்ளிக்கு வருவது என்பது எவ்வாறு பள்ளியின் கட்டுப்பாட்டை பாதிக்கும் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.