இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

0
162
Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!
Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது.

அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் மாண்டஸ் புயலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து இம்மாதம் 2ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கியது.

இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.இவ்வாறு தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததின் காரணமாக பள்ளிகளில் பாடத்திட்டம் முழுமையாக முடிக்கபடாமல் உள்ளனர்.அதனால் அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் வியாழக்கிழமை தேதி அட்டவணைப்படி பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவித்துள்ளனர்.

Previous articleமுதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!
Next articleமார்ச் 3 திருவிழா பக்தர்கள் 3500 பேருக்கு மட்டுமே அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!