தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்திலிருந்து பள்ளிகள் திறப்பா? வெளிவரும் ஆலோசனை முடிவுகள்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து பரவி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அதிகமாக காணப்படும் ஆறு மாதங்களுக்கு ஊரடங்கு காலமாகவும் அதனை அடுத்த 6 மாதங்களுக்குள் ஏற்ற காலமாகும் தற்பொழுது தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆறு மாதங்களில் கொடுக்கும் தவறுகளினால் மீண்டும் தோற்றால் அது அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி செல்கின்றது. இதன் நடுவே பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க முடியாத காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.
மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தீர்வின்றி தமிழக அரசு ஆல்பாஸ் செய்தது.அதனையடுத்து பள்ளி கல்லூரிகள் திறப்பு பற்றி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.. ஆனால் தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பள்ளி திறப்பை ஒத்தி வைத்துள்ளனர்.அதனையடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் இன்றும் வெளிவராத நிலையில் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கல்லூரி சேர்க்கை நடைபெறும் என அறிவிப்பை வெளியிட்டனர்.
அதனடிப்படையில் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு மேல் அல்லது ஒன்றாம் தேதியிலிருந்து 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கூறி வருகின்றனர். அதனால் இன்று தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இது குறித்து ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.இதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என அரசின் சுற்று வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.மேலும் ஊரடங்கும் தளர்வுகள் வரும் 19ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், மேற்கண்ட முடிவுகளும் கூட்டத்தின் மூலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.