இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை? 

Photo of author

By Rupa

இத்தனை மாணவர்களுக்கு தொற்று பாதிப்பா? கல்லூரிகளுக்கு விடுமுறை?

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர்.தற்போது வரை இதிலிருந்து மீள முடியவில்லை.பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பிறகு இந்த தொற்று குறையும் என மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை இருந்தது.தற்போது அந்த நம்பிக்கையெல்லாம் சுக்குநூறாக உடைந்துவிட்டது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.கொரோனா தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அந்தவகையில் சென்னை ஐஐடி கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. அதனை அடுத்து செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 25 பேருக்கு தற்பொழுது தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நான்காம் அலை தற்பொழுது கணிசமாக பரவிவரும் நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செங்கல்பட்டில் சாய் மருத்துவ கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்த மாணவர்கள் 39 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 25 பேருக்கு தற்பொழுது தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தற்பொழுது 25 மாணவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் இருந்த சக மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு குறைந்த அளவு மாணவர்கள் இருப்பதால் தொற்று பாதிப்பு பெருமளவில் இருக்காது என சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு பரவி உள்ளதா என உறுதி செய்ய மீதமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து தொற்றுப் பாதிப்புகள் அதிகரிக்குமாயின் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படலாம்.