ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அளித்த விளக்கம்
ஆதாரை இணைக்கும் போது மானியங்கள் ரத்து செய்யப்படும் என்ற பொய்யான தகவல் பரவி வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் அவசியம் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகளும்,22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் மின் இணைப்புகளை ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற தகவல் பொதுமக்களின் தொலைபேசி எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளதாக சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் விவசாயம் மின்சாரத்திற்கும் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மேலும், தனிநபர் ஒருவர் ஐந்து இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதாரை வைத்து 10 மின் இணைப்பிலும் இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள், அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் முதியவர்களுக்கு சிறப்பு வசதிகள் முகாமில் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 2.33 கோடி மின் நுகர்வோரின் 15 லட்சம் பேர் ஆதார் இணைத்துள்ளனர் என்றும் பணம் கொடுத்த ஆதார இணைக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அவசரமாக ஆதர இணைக்க தேவையில்லை. டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.மின்வாரியம் தற்போது 1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இழப்புகளை சரி செய்யவும், மேம்படுத்தவோமே ஆதார் இணைக்கப்படுகிறது. என்று அவர் கூறியுள்ளார்.