முதலமைச்சர்  இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்!

முதலமைச்சர்  இன்று வீடு திரும்புவாரா? கட்சித் தொண்டர்கள் ஆர்வம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த 12ஆம் தேதி கொரோனாவால்  பாதிப்படைந்தார். இதனையடுத்து கடந்த 17ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மு க ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மிகக் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

மேலும் இதனை அடுத்து காவேரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மருத்துவ நிபுணர் குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் முக.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றாய் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா தொற்றில்  இருந்து குணமடைந்துள்ளார் எனவும்  நோய் தொற்றுக்கான தனிமைப்படுத்துதல் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும்  அவர் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார் என்றும் கூறினார். மேலும் அடுத்த ஒரு வாரத்துக்கு முதல்வர் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் கூறியிருந்தார்.

Leave a Comment