இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!

0
258
#image_title
இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!
 இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜீன் மாதம் பதினாராம் தேதி முடிவடைகிறது எனவே ஜீன் மாதத்திற்க்குள் இந்தியா முழுவதும் 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலை நடத்தி அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது.
எனவே 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தால் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொகுதி பங்கீடு செய்வது தங்களது சின்னத்தை பெறுவது பிரச்சாரம் மேற்கொள்வது என இறுதி கட்டத்தில் எட்டியுள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என நாடே எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் தங்களது சமூக வளைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று மாலை 3மணிக்கு விஞ்ஞான பவனில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்படும் எனஅதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Previous articleஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
Next articleமன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்! – காரணம் இது தானாம்?