மகளிருக்கு இலவச பஸ் பயணம் தொடருமா? தணிக்கை துறை ஆய்வு!!

Photo of author

By Vinoth

சென்னை:  தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மே மாத 7-ம் தேதி இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மகளிர் இலவச பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்த திட்டத்தில் மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டையில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த 2 சலுகை திட்டங்கள் அவசியமா என தணிக்கை துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அதன்படி இந்த இலவச பஸ் பயணம் பொறுத்த வரை ஏழை எளிய மக்கள் மட்டும் வழங்க வேண்டும் என 53% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இலவச பஸ் சலுகை பயணம் மூலம் 90% பெண்கள் பயனுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு கட்டணம் செலுத்தும் பயணிகள் போல நடத்தப்படுகிறதா என கேட்ட போது அந்த கேள்விக்கு 69% பேர் இல்லை என பதில் அளித்துள்ளனர்.

இலவச பயண சலுகையால் மட்டுமே கல்வியை தொடர முடிகிறது என 62 சதவீதம் மாணவர்கள் பதில் அளித்துள்ளனர். இலவச பயணத்தால் ஒவ்வொருவரும் மாதம் தோறும் ரூ.637 சேமி க்க முடியும் என மாணவர்கள், பெண்கள் தெரிவித்துள்ளனர்.