மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? போராட்டம் தேதி ஒத்திவைப்பு!
ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.இந்த வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சரவணன்,ஏழுமலை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுவில் நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம் விஜயன் மற்றும் மனோகரன் ஆகியோர் தொழில் தகராறு சட்டத்தின்படி சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு வேலை நிறுத்த போரட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது.இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.மேலும் ஒரு போராட்டம் நடத்த முடிவு செய்தால் அதற்கு ஆறு வாரங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட வேண்டும்.ஆனால் இவர்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை என கூறினார்.
அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன் மின் வாரிய ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.மேலும் இதுபோல மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்,ஆவின் விநியோகம்,மருத்துவமனையின் செயல்பாடுகள்,பள்ளி ,கல்லூரிகளின் செயல்பாடுகளை பாதிக்கும்.அதனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக மின்வாரிய தொழிற்சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.