இந்த காலத்தில் இளநரை பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர்.சிறு வயதில் தலை நரைத்துவிடுவதால் பலரும் முதுமை தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்.முதுமையில் நரைத்த முடியை கருமையாக்க டை அடிக்கும் நிலையில் இளநரை பிரச்சனை இருப்பவர்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.
இளமையில் வந்த தலை நரையை கருமையாக மாற்ற நீங்கள் நிச்சயம் ஹேர் டை பயன்படுத்துவீர்.முன்பெல்லாம் கெமிக்கல் ஹேர் டை பயன்பாடு அதிகமாக இருந்தது.ஆனால் தற்பொழுது கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதை பலரும் தவிர்க்கின்றனர்.கெமிக்கல் ஹேர் டையால் முடி உதிர்தல்,சருமப் பிரச்சனைகள் போன்றவை அதிகமாக இருந்ததன் காரணமாக இயற்கை பொருட்களை கொண்டு தலைமுடியை கருமையாக்குகின்றனர்.
மருதாணி,அவுரி,கறிவேப்பிலை,கருஞ்சீரகம் போன்ற பொருட்கள் தலைமுடியை கருமையாக்க உதவுகிறது.சிலர் தலைமுடி சீக்கிரம் கருமையாக வேண்டுமென்று அவுரி ஹேர் டையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.அவுரி ஹேர் டையை அதிகமாக பயன்படுத்தினால் சரும நிறம் கருமையாக மாறிவிடும் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.
அவுரி ஒரு இயற்கை மூலிகை பொருள்தான்.இருப்பினும் இந்த அவுரியை கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் டை சில சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே அவுரிப் பொடியை தலைக்கு அதிகமாக பயன்படுத்தாமல் குறைவான அளவு மட்டும் பயன்படுத்தி வாருங்கள்.
அவுரி பொடி பயன்படுத்தி சருமத்தின் நிறம் கருப்பானவர்கள் சருமத்தை வெள்ளையாக மாற்ற செய்ய வேண்டிய அழகு குறிப்புகள் இதோ.
1)பால்
2)சந்தனப் பொடி
கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிது காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சருமம் வெள்ளையாக மாறும்.
1)முல்தானி பொடி
2)ரோஸ் வாட்டர்
கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி முல்தானி பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதை சருமத்தில் அப்ளை செய்து நன்கு உலர வைக்க வேண்டும்.பிறகு தண்ணீர் கொண்டு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இதுபோன்று செய்து வந்தால் சருமம் பழைய நிலைக்கு வரும்.