கொரோனாவை மிஞ்சிய கொடுமை தீர்வு கிடைக்குமா? ஏங்கும் மக்கள்!

Photo of author

By Parthipan K

அழிந்து வரும் விவசாயம், நாடுகளுக்கு இடையேயான மோதல், விலைவாசி ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று போன்ற பல காரணங்களால் உணவுப்பற்றாக்குறையால் 27 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஐ.நா சபையில் வெளியான தகவல்.

ஐ.நா சபை மேற்கொண்ட ஆய்வின்படி சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் சந்தைகளில், உலக உணவு விலைகள் ஜூன் மாதத்தில் ஆண்டுக்கு 34% உயர்ந்துள்ளதாக ஐ.நா உணவு நிறுவனத்தின் விலைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது . லெபனான் நாட்டில் கோதுமை மாவின் விலை 219 மடங்கு உயர்ந்துள்ளது. சிரியாவில் சமையல் எண்ணையின் விலை 440 மடங்கும் உயர்ந்து உள்ளது. இதற்கு சிறிய கடந்த ஆண்டு மேற்கொண்ட போரும் ஒரு காரணமாகும்.

43 நாடுகளில் சுமார் 4.1 கோடி மக்கள் பஞ்சத்தின் அபாயத்தில் உள்ளனர், நான்கு நாடுகளில் கிட்டத்தட்ட 60,00,000 பேர் ஏற்கனவே உணவை பஞ்சத்திலும், பட்டினியிலும் இறந்துவிட்டனர்.

கொரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகளவில் பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலியாகி வருவது தெரியவந்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு எத்தியோப்பியா, மடகாஸ்கர், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலும், நைஜீரியா மற்றும் புர்கினா பாசோவிலும் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதில் 584,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வில் கிடைத்த மற்றொரு தகவல் என்னவென்றால் உலகமெங்கும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளை விட தற்பொழுது நிலத்தடிநீர் 13 மடங்கு குறைந்து விட்டதாகவும், அது கிட்டத்தட்ட இந்திய பெருங்கடலுக்கு சமமான அளவு என்று குறிப்பிட்டுள்ளனர்.