இளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!!

Photo of author

By Jeevitha

இளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!!

Jeevitha

Will the younger commander enter politics?? Political parties competing like I am you!!

இளைய தளபதி அரசியலுக்கு வருவாரா??  நான் நீ என  போட்டி போடும் அரசியல் கட்சிகள்!!

தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நீலாங்கரையில் நடைபெற்றது.

இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய் மாணவர்களிடம் ஓட்டு போடுவதற்கு பணம் வாங்க கூடாது என்றும், இதனை பெற்றோர்களிடமும்  சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அரசியலுக்கு  வருவதையும் மறைமுகமாகவும்  கூறினார். அதனையடுத்து ரசிகர்கள் சில தளபதி அரசியலுக்கு வருவார்  என்று இணையத்தில்  தகவலை பரப்பி வருகிறார்கள்.

இதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதே போன்று தேசிய கட்சியான பாஜகவும் விஜய் அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சியில் கூட்டணிக்கு வைக்க அழைப்பு விடுப்போம் என்று எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வந்தால் கூட்டணி வைக்க அழைப்பு விடுப்போம்  என்று காங்கிரஸ் கட்சி கூறியது குறிப்பிடத்தக்கது.