தமிழக அரசின் அனுமதிக்கு ஆப்பு வைத்த தனி ஒருவன்?

0
50

தொடர்ச்சியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில் திரையரங்குகளும் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்ற அனுமதியை தமிழக அரசு வழங்கியது.தற்சமயம் தமிழக அரசின் இந்த அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் தமிழக முழுவதும் தற்சமயம் திருவிழா காலமாக உள்ளது. இந்த நேரத்தில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறது.

பாதிப்புகள் குறைந்ததன் காரணமாக தான் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நோய்த்தொற்றுகள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டால் நோய் தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும். திரையரங்குகளில் சமூக இடைவெளி என்பது குறைந்து போகும் சென்ற நோய்த்தொற்று அலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியீடு செய்யப்பட்டது இதுகுறித்து ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டன என தெரிவித்திருக்கிறார்.

இந்த வருடம் தீபாவளி தினத்தன்று அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. நோய்த்தொற்று மறுபடியும் வேகமெடுக்க இது மேலும் ஒரு காரணமாகி விடும் என்பதால் திரை அரங்குகளில் 100 சதவீதம் இயங்கலாம் என்று அழைக்கப்படுகின்ற அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நவம்பர் மாதம் 1ஆம் தேதி தீபாவளி திருமண நாளான நவம்பர் மாதம் நான்காம் தேதி உள்ளிட்ட நாட்களில் திரையரங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிவமுருகன் ஆதித்தன் தொடர்ந்து இருக்கின்ற இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை நீதிமன்றம் திரையரங்குகளை மூட வேண்டும் என்று தெரிவித்தால் என்ன செய்வது என்பதுதான் தற்சமயம் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்டோரின் ரசிகர்கள் தற்போது கவலைப்பட தொடங்கிவிட்டார்கள்.

இதுதொடர்பாக திரையரங்குகள் தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரித்த சமயத்தில் சினிமாவை தொட்டு வழக்கு தொடர்ந்தால் நடிகர், நடிகைகளை பற்றி எதிர்மறையான அறிக்கைகளை வெளியிட்டால் பொதுவெளியில் ஊடகங்கள் மூலமாக பரபரப்பாக தங்களுடைய பெயர் பேசப்பட வேண்டும் என்ற மன வியாதியின் வெளிப்பாடு அதிகரித்து வருகின்றது. இதனை தவிர்க்க இயலாது தமிழக அரசின் முடிவுக்கு ஏற்றவாறு திரையரங்குகளை மூடி வைத்திருந்தோம். தற்சமயம் திறந்திருக்கிறோம் இந்த வழக்கை தமிழக அரசு பார்த்துக் கொள்ளும் எங்களுடைய உண்மை நிலை அறிந்த தமிழக முதலமைச்சர் வழிகாட்டலின் அடிப்படையில் தான் நாங்கள் செயல்பட்டோம் ஆகவே எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.