இந்தக் கூட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா? ஒன்றிய அரசு யார் பக்கம்?

Photo of author

By Rupa

இந்தக் கூட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா? ஒன்றிய அரசு யார் பக்கம்?

கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் பல காலமாக இந்த காவிரி சம்பந்தமான பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.காவிரியின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் அனுமதி கேட்காமல் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா பல முயற்சிகளை செய்து வருகிறது .ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்போ காவிரியின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்கள் அனுமதி தந்த பிறகு மேகதாது அணை கட்ட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது .ஆனால் கர்நாடகா அரசு அதனை சிறிதும் மதிக்காமல் அணை கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நம் தமிழக முதல்வர் தமிழகத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினர் கூட்டம் இரு நாட்களுக்கு முன்பு கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் காவிரி நமது வாழ்வுரிமை என மு.க. ஸ்டாலின் கூறினார்.அதேபோல காவிரி விவகாரத்தில் தமிழ் நாட்டின் ஒற்றுமையை கர்நாடகாவிற்கு,மத்திய அரசிற்கும் நாம் உணர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தற்போது மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்படுவார்கள் .அதனால் தமிழக அரசு ,கர்நாடகா அணை கட்டுவதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.நேற்று கர்நாடக முதல்வர் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடகாவிற்கு நீதி கிடைக்கும் என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.அதேபோல கர்நாடக முதல்வரும் மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என தெரிவித்தார். அப்பொழுது மத்திய அரசு கர்நாடகாவிற்கும் ஆதரவு தெரிவிக்கிறது என தெரியவந்தது .இந்நிலையில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு விரைவில் ஆலோசனை செய்ய இருக்கிறது.அந்த நான்கு மாநிலங்களான தமிழ்நாடு ,கர்நாடகா ,புதுச்சேரி, கேரளா ஆகியவை அடங்கும்.இந்த கூட்டத்திற்கான ஆலோசனையை நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நடத்தவுள்ளார்.

இந்த கூட்டத்திற்கான அழைப்பானது  இந்த 4 மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பப்படும் என சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.இந்தக் கூட்டமானது காணொலி காட்சி வாயிலாக இருக்காது என்றும் நேரடியாகவே 4 மாநில முதல்வரை சந்தித்து திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.இந்த கூட்டத்தின் முடிவில் தமிழ் நாட்டிற்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.