மின் மானியம் பெறுதல் மற்றும் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுமா? இன்றே கடைசி நாள் மக்களே முந்துங்கள்!
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் திடீரென மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.அதனை தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது.அதுமட்டுமின்றி தற்போது உள்ள காலகட்டத்தில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகின்றது.அனைத்து ஆவணங்களுடன் ஆதார் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கும் 100 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.அந்த மின்சார மானியத்தை தொடரந்து பெற வேண்டும் என்றால் மின்நுகவோர் ஆதார் எண்னை அவரவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் சேர்க்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டது.
அதனை தொடரந்து கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும். இல்லையெனில் மின்சார மானியம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.அதனால் மின் அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டது.
இருப்பினும் பலரும் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்கவில்லை என புள்ளி விவரம் குறிப்பிட்டது.அதனால் கூடுதல் அவகாசம் வழங்க மின் வாரியம் முடிவு செய்தது.அதனால் ஜனவரி 31 ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காதவர்கள் விரைந்து அதனை முடிக்க வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது.
அதன் அடிப்படையில் இன்று தான் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை இணைக்காத மக்கள் உடனடியாக இணைக்க வேண்டும் இல்லையெனில் மின் மானியம் மற்றும் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் https://www.tncbltd.gov.in/BillStatus.xhmtl என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும்.அப்போது நாம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.