கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்!

0
107

கைப்பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பு கரைய வேண்டுமா? இந்த ஒரு காய் போதும்! 

இன்றைய ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பது. அதிலும் பொதுவாக சிலருக்கு கைப்பகுதியில் அதிக சதை இருக்கும். இதனால் விருப்பமான ஆடைகள் அணிய முடியாத சூழ்நிலை ஏற்படும். கைப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து குறைக்கக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறையில் செய்யக்கூடிய பானத்தைப் பற்றி பார்ப்போம்.

1. முதலில் இதற்கு எடுத்துக் கொள்ளக் கூடிய பொருள் சௌசௌ காய். ஒரு  எலுமிச்சை பழ அளவு துண்டு தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

2. அடுத்து ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா விதைகள், 2 பல் பூண்டு மற்றும் 8 மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை நம் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்பை கரைக்கும் வலிமை பெற்றவை.

சௌசௌ காய் சிறிய துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். இதில் எடுத்து வைத்த மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக ஒரு பேஸ்ட் பதத்திற்கு சிறிது வெதுவெதுப்பான நீர் விட்டு அரைக்கவும்.

இதை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு இதில் சூடான நீர் ஊற்றி ஊற விடவும். நீர் நன்றாக கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். ஓரளவு வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்ததும் இதை வடிகட்டி பருகலாம்.

இதை வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாள் பருகிவர நமது உடலில் மெட்டபாலிசத்தை தூண்டி குறிப்பாக கைப்பகுதியில் உள்ள கொழுப்புகளை கணிசமான அளவில் குறைக்கும்.