கடந்த மார்ச் மாதம் திமுகவின் கழக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், கட்சியில் பொதுச்செயலாளர் பதவி காலியானது.
இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.
அதன்பிறகு கழக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்நிலையில் திமுகவின் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது, திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் குறித்தான பரிசீலனையை நாளை மறுநாள் நடைபெறும் எனவும்,
வேட்புமனுவை திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பொருளாளர் பதவிக்கு போட்டியிட டி ஆர் பாலு இன்று அறிவாலயத்தில் மனு வாங்க வருகிறார். ஏற்கனவே டெல்லி சென்றிருந்த அவர் அவசரமாக இன்று சென்னை திரும்புகிறார். இதன் மூலம் திமுகவின் பொருளாளராக டி.ஆர் பாலு என்பது உறுதியாகிவிட்டதாக திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சி பொதுச்செயலாளர் பதவிக்கு ஏற்கனவே துரைமுருகன் விருப்பமானது தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், திமுக கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும், இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.