தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தலைமை தாங்குபவராக உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளார். பிக்பாஸ் குழுவினர் டிஆர்பியை எகிற வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். அப்படி தான் இந்த 4வது சீசனிற்கான பிரபலங்களை தேடும் வேட்டையை அவர்கள் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே லட்சுமி மேனன், அம்ரிதா, ரியோ ராஜ், ஷிவானி, பாலாஜி முருகதாஸ், புகழ், சனம் ஷெட்டி போன்றோர் இடம்பெறுகிறார்கள் என்று கூறி வருகின்றனர்.
இவர்களுடன் சமீபத்தில் யூடியூப் மூலம் அதிகம் பிரபலமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை பிக்பாஸ் குழுவினர் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் எப்போதும் இல்லாத புது விஷயமாக அவருக்கு முண் பணமாக ரூ. 57 லட்சமும் கொடுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ரவீந்தர் இன்னும் போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை இவர் கலந்துகொள்ள போகிறாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.