9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! என்ன முடிவு எடுக்கப் போகிறார் டிடிவி தினகரன்!

0
124

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய புதிதில் டிடிவி தினகரன் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதிமுகவிற்கு எதிராக பல அதிரடி கருத்துக்களையும் அவர் முன்வைத்திருந்தார். அதோடு அதிமுகவில் எங்களுடைய ஸ்லிப்பர்செல்ஸ் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தார்.பொதுவாக பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி, கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் போதும் சரி, மிகவும் நிதானமாக காணப்படும் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தாலும் கூட ஒரு மெலிந்த புன்னகையுடன் காட்சி அளிப்பார் என்பது தமிழகம் அறிந்ததுதான்.ஆகவே அவர் மிஸ்டர் கூல் தலைவர் என பொதுமக்களால் அழைக்கப்படும் அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில், கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன் அங்கு தோல்வியடைந்தார்.இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் விடுபட்டு இருந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகின்றது.அதேபோல பிரதான அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்ட சூழ்நிலையில், கூட்டணியுடன் போட்டியா? அல்லது தனித்து போட்டியா? என்பது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில் எதிர்வரும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவோம் என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. அதேபோல தேமுதிக தனித்து போட்டியிடுவதாக தெரிவித்துவிட்டது. மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட இருக்கின்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன என சொல்லப்படுகிறது. 25ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பார் கூறுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியை தற்சமயம் அதிமுக கூட்டணியில் இருக்கின்ற நிலையில் அதே கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். பாமக கூட்டணியில் இருக்கிற மற்ற கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக அதிமுக நேற்றையதினம் அறிவித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மட்டுமே இதுவரையில் சப்தமே இல்லாமல் இருக்கிறது அதே நேரம் இந்த அதிமுக கூட்டணியில் இருக்கின்ற தேமுதிக தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறது. சென்ற முறையே அனைத்து கூட்டணி கதவுகளும் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் தான் கடைசி சமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் தேமுதிக இணைந்தது நாயுடு சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தினகரன் தேமுதிக மீது தன்னுடைய பார்வையைத் திருப்பினார். தென்மண்டல வாக்குகளை தினகரனை வைத்து பெறுவதற்கு தேமுதிக கணக்கு போட்டது, இறுதியில் இரண்டுமே தோல்வியைத் தழுவியது.

தேமுதிகவிற்கு டிடிவி தினகரன் முழுமையாக பிரச்சாரத்தில் கூட ஈடுபடவில்லை என சொல்கிறார்கள். விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பிரேமலதா மட்டுமே தன்னுடைய கட்சிக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். தேர்தலுக்குப் பின்னரும் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி பெரிதாக வலு பெறவில்லை. இதற்கிடையில் விஜயகாந்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுவதும் உதயநிதி விஜயகாந்தை சந்தித்து ஆசீர்வாதம் என வேறு ஒரு பாதையில் அரசியல் பயணம் தொடங்கியது தேமுதிகவிற்கு.

இவ்வாறான சூழ்நிலையில் தான் தேமுதிக தனித்து போட்டியிடுகிறோம் என சொல்லி இருக்கிறது. அப்படி என்றால் டிடிவி தினகரன் தனித்து போட்டியிடுவாரா? என்ற தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. கட்சி போட்டியிடுமா? அல்லது இல்லையா? என்று கூட தெரியாத ஒரு குழப்பம் அந்தக் கட்சிக்குள் நிலவிவருகிறது. தன்னுடைய மகள் திருமணத்தில் தினகரன் இவ்வளவு நாள் பிஸியாக இருந்ததன் காரணமாக, ஒருவேளை இனி தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Previous articleபிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள்! பாஜக தலைமை செய்த பிரம்மாண்ட ஏற்பாடு!
Next articleசெக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!